இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன வீரர்கள் பின்வாங்கினர்

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள திபாங் பள்ளத்தாக்கு பகுதியில் 1000 மீட்டர் தூரத்திற்கு இந்திய  எல்லைக்குள்  சீன வீரர்கள் நுழைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2860
அக்டோபர் முதல் வாரத்தில், அருணாச்சல பிரதேச எல்லைப்பகுதியில்  சீன மக்கள் விடுதலை இராணுவம் (பி.எல்.ஏ.) இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள்  தெரிவிக்கின்றன.

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள திபாங் பள்ளத்தாக்கு பகுதியில் 1000 மீட்டர் தூரத்திற்கு இந்திய  எல்லைக்குள்  சீன வீரர்கள் நுழைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன இராணுவ வீரர்கள் இந்தியாவுக்குள் நுழைந்ததாக சீன ராணுவதிற்கு தெரிவித்ததை தொடர்ந்து சீன  துருப்புக்கள் பின்வாங்கியது. இந்த சம்பவத்திற்கு 10 நாட்களுக்கு  முன் இரு தரப்பினரும் இது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர்.
எதிர்காலத்திலேயே டோக்லாம் போன்ற சம்பவங்கள் நடக்கக்கூடும் என்று சீன நடவடிக்கைகளின் போக்கை  சுட்டிக்காட்டுவதாக  இரண்டு முன்னாள் உயர் இராணுவ தளபதிகள் தெரிவித்தனர். இந்திய இராணுவம்  பலவீனமான எல்லைப் பகுதிகளில் உள்கட்டுமானத்தை அதிகரிக்க வேண்டும் என கூறினர்.
இந்த ஆண்டு முன்னதாக, சீன நாளேடான தி குளோபல் டைம்ஸ் விரைவில் மற்றொரு டோக்லாம்  போன்ற நிலைப்பாடு மோதல் பற்றி எச்சரித்து இருந்தது. அந்த கட்டுரையில்  2017-ம் ஆண்டு கோடைகாலத்தில் டோக்லாமில் தாக்கியதில் இருந்து இந்தியா சீனாவிற்கு ஆத்திரமூட்டும் சிக்னல்களை அனுப்பியுள்ளது இது ஏற்கனவே சினோ-இந்திய உறவை இன்னும் பலவீனமாக்குகிறது.
சீன இராணுவத்தால் சர்ச்சைக்குரிய சிக்கிம் செக்டார் டோக்லாம் மும்முனைப் பாதையில் ஒரு சாலையின் கட்டுமானத்தை  நிறுத்த கோரி இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் சீனா- இந்திய ராணுவங்கள் அங்கு 73  நாட்கள் குவிக்கப்பட்டு இருந்தன. பின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு தரப்பும் படைகளை வாபஸ் வாங்கினர்.

Your Comments