தேவன் விரும்பாத இருதயங்கள்

வேதத்தில் பல விதமான இருதயங்களைக் குறித்துக் காணமுடியும். இந்தச் செய்தியில், ஏழு விதமான இருதயங்களைக் குறித்துப் பார்ப்போம் .

4195

ராபின் சாம்

அவர்கள் இருதயம் பிரிக்கப்பட்டிருக்கிறது (ஓசியா 10:2).

வேதாகமத்தில் ஓசியா தீர்க்கதரிசனப் புத்தகம் விசேஷமானது. அதில் இஸ்ரவேல் தேசத்தின் பாவங்களும், அதினால் தேவனின் கோபாக்கினைக்கு அவர்கள் ஆளாகப்போவதும், அதிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரவேலின் பாவங்களில் ஒன்றைத்தான் மேலேயுள்ள வசனம் வெளிப்படுத்துகிறது. அவர்கள் இருதயம் பிரிக்கப்பட்டிருக்கிறது.

வேதத்தில் பல விதமான இருதயங்களைக் குறித்துக் காணமுடியும். இந்தச் செய்தியில், ஏழு விதமான இருதயங்களைக் குறித்துப் பார்ப்போம் .

கொழுத்த இருதயம்

இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே (மத்தேயு 13:15).

தீட்டுப்படுத்தும் இருதயம்

மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும் (மாற்கு 7:21-22).

இருளடைந்த இருதயம்

அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது (ரோமர் 1:21).

கசப்பு நிறைந்த இருதயம்

இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்; அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தையாகான் (நீதிமொழிகள் 14:10).

பின்வாங்கும் இருதயம்

பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன் வழிகளிலேயும், நல்ல மனுஷனோ தன்னிலே தானும் திருப்தியடைவான் (நீதிமொழிகள் 14:14).

விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார் (எபிரெயர் 10:38).

பொல்லாத இருதயம்

மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது (ஆதியாகமம் 6:5-6).

இச்சை நிறைந்த இருதயம்

இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார் (ரோமர் 1:24).

மேலே சொல்லப்பட்டுள்ள இருதயங்கள் எல்லாம் தேவனுக்குப் பிரியமில்லாத இருதயங்கள்.

இந்த வசனங்களின் வெளிச்சத்தில் நம்முடைய இருதயம் எப்படியுள்ளது என்று ஆராய்ந்துப் பார்ப்போமா? இப்போது ஜெபிப்போம்.

ஜெபம்: தேவனே, இன்று நீர் விரும்பாத இருதயங்களைக் குறித்து என்னோடு பேசினீர். அதற்காக ஸ்தோத்திரம். உம்முடைய இருதயத்துக்கு ஏற்ற மனிதனான தாவீதைப் போல என்னையும் மாற்றும், ஆண்டவரே. நீர் விரும்பும் காரியங்களை நானும் விரும்பவும், நீர் வெறுக்கும் காரியங்களை நானும் வெறுக்கவும் எனக்குக் கிருபைத் தாரும். உம்முடைய இருதயத் துடிப்பை அறிந்துகொள்ளும் விதத்தில் உம்மோடு நெருக்கமாய் இருக்க என்னை ஒப்புக்கொடுக்கிறேன். என்னை ஏற்றுக் கொள்ளும். இயேசுவின் நாமத்தில், ஆமென்.

Your Comments