சகோ. சாம் ஜெபத்துரை மகிமையில் பிரவேசித்தார்

நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன் (2 தீமோத்தேயு 4:7).

1678

சகோ. சாம் ஜெபத்துரை (ஏலீம் சபை, அன்றன்றுள்ள அப்பம்) இன்று காலை 5:30 மணியளவில் மகிமையில் பிரவேசித்தார்.

தமிழ் நாட்டில் இடையன்குடியில் ஜோசப்-சௌந்தரமணி தம்பதிக்கு மகனாக சாம் ஜெபத்துரை பிறந்தார்.

பாளையம்கோட்டையில் செயின்ட் ஜோசப் பள்ளிக்கூடத்திலும், செயின்ட் சேவியர் கல்லூரியிலும் படிப்பை முடித்துவிட்டு, வருமான வரித்துறையில் பதினாறு ஆண்டுகள் வேலை செய்தார்.

1975-ஆம் வருடம் வினோவுக்கும், சாம் ஜெபத்துரைக்கும் திருமணம் நடந்தது. திருமதி வினோ வருவாய் துறையில் வேலை பார்த்தார். ஆனால், 1985-ஆம் வருடம் இருவருமே தங்கள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர ஊழியத்திற்கு தங்களை ஒப்புக்கொடுத்தனர்.

சகோதரர் 8-ஆவது வயதில் போலியோ பாதிப்பினால் வருந்தினார். ஆனால், தேவன் அவருக்கு சுகம் கொடுத்தார்.

வேலை செய்யும்போதே கைப்பிரதி ஊழியம், மருத்துவமனை ஊழியம், ஜெப ஊழியம் என்று அநேக ஊழியங்களை செய்து வந்தார்.

அன்றன்றுள்ள அப்பம் என்ற மாதப் பத்திரிக்கையை நடத்தினார். பிற்காலத்தில், ஏலிம் மகிமையான எழுப்புதல் சபையை ஆரம்பித்தார்.

சகோதரருக்கு நான்கு பிள்ளைகள். மூத்த மகன் ஆஸ்பார்ன் சபையை நடத்தி வருகின்றார்.

அன்னாரின் குடும்பத்திற்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே சொடுக்கவும்.

Your Comments