கர்த்தரின் செட்டையின் கீழ் கிடைக்கும் 5 ஆசீர்வாதங்கள்

வேதத்தில் இருந்து, கர்த்தரின் செட்டையின் கீழ் கிடைக்கும் 5 ஆசிர்வாதங்களைக் குறித்து இன்று தியானிப்போமா?

484
    வேதத்தில் இருந்து, கர்த்தரின் செட்டையின் கீழ் கிடைக்கும் 5 ஆசிர்வாதங்களைக் குறித்து இன்று தியானிப்போமா?

1. அடைக்கலம்

எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன் (சங்கீதம் 57:1).

    2. திருப்தி

தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள். உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர் (சங்கீதம் 36:7-8).

3. பெலன் மற்றும் மகிழ்ச்சி

நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன் (சங்கீதம் 63:7).

4. பாதுகாப்பு

அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும் (சங்கீதம் 91:4).

5. ஆரோக்கியம்

ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள் (மல்கியா 4:1).

Your Comments