இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவு

சுமார் 9.25 மணியளவில் BSE சென்செக்ஸ் 910.93 புள்ளிகள் அல்லது 2.62 சதவிகிதம் 33,939 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்பட்டது.

278

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 821 புள்ளிகள் சரிந்து 33,939-இல் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 265 புள்ளிகள் சரிந்து 10,194-இல் வணிகமாகிறது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று வர்த்தக தொடக்கத்திலேயே சுமார் 1000 புள்ளிகள் வரை சரிந்தது. இதே போல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டியும் சுமார் 300 புள்ளிகள் வரை சரிந்து வர்த்தகமானது. ஆனால் அதன் பிறகு சிறிதளவு சரிவில் இருந்து சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி பழைய நிலைக்கு மீண்டுள்ளது.

இதே போல் இந்திய ரூபாய் மதிப்பும் இன்று சரிவை சந்தித்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 74.47 காசுகளாக குறைந்தது. உலக நாடுகளின் பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவே இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்துள்ளதாக வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

சுமார் 9.25 மணியளவில் BSE சென்செக்ஸ் 910.93 புள்ளிகள் அல்லது 2.62 சதவிகிதம் 33,939 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்பட்டது. அதேபோல், NSE நிஃப்டி 278.45 புள்ளிகள் அல்லது 2.66 சதவீதம் சரிந்தது 10,194 ஆக இருந்தது.

சென்செக்ஸ் பேக்கில் ONGC தவிர அனைத்து பங்குகளும் சிவப்பு நிறத்தில் வர்த்தகம் செய்யப்பட்டன. ஆக்சிஸ் வங்கி 4.98 சதவிகிதம் குறைந்துவிட்டது. நேற்று காலை 467.42 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 34,760.89 ஆக இருந்தது.

DII-ல் ரூ.1,892.94 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் நிகர லாபம் ரூ.1,096.05 கோடியாகும்.

Your Comments